வாரிசு படத்தில் ஒரு காட்சியில் கூட தோன்றாத குஷ்புவுக்கு இவ்வளவு சம்பளமா?
வாரிசு படத்தில் நடிகை குஷ்பு நடித்த ஒரு கட்சிகள் கூட படத்தில் இல்லை என்றாலும் இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பவம் தொடர்பான தகவல் வைரலாகி வருகிறது.
வாரிசு
பொங்கல் தினத்தன்று விஜயின் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், குஷ்பு, எஸ்.ஜே.சூர்ய போன்ற பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
விஜயின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
குஷ்பு நடித்த காட்சி
வாரிசு படத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தாலும் ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தின் நேர அளவு அதிகமாக காணப்பட்டதால் குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டதாக படத்தின் எடிட்டர் கூறினார்.
இவ்வாறு நடந்தாலும், டெலிட்டட் சீன் என்ற பெயரில் குஷ்பு நடித்த காட்சிகள் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
குஷ்புவின் சம்பளம்
இந்த படத்திற்காக நடிகை குஷ்பு 40 லட்ச ரூபாய் சம்பளத்தை பெற்றதாக சொல்லப்படுகின்றது.
இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.