நடிகை குஷ்புவின் புதிய ஸ்டைல்... மாமியாரான பின்பும் இப்படியா?
நடிகை குஷ்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் வருஷம் 16 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் தான் நடிகை குஷ்பு. பின்பு பிரபுடன் நடித்த சின்னதம்பி திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியுள்ளார். தனது நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
முறைமாமன் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குனரான சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகளின் திருமணம்
கடந்த மாதம் மூத்தமகள் அவந்திகாவிற்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மருமகனுக்கு மாமியாராக மாறியுள்ளார்.
எப்பொழுதும் கொழுகொழுவென இருந்து வந்த குஷ்பு தற்போது உடல்எடையைக் குறைத்து இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காணப்படுகின்றார்.

இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். கருப்பு நிற உடையில், தலையில் கருப்பு நிற மங்கி கேப் அணிந்து ஒரு காலை தூக்கி மடித்து இளைஞர்கள் நிற்பது போன்று கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் மாமியாராகிய பின்பும் குறையாத குஷ்புவின் ஸ்டைல் என்று கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.
