மீண்டும் உடல் எடை அதிகரித்துவிட்டாரா குஷ்பு? வெளியான புகைப்படம்
நடிகை குஷ்பு உடல் எடை குறைத்து மாடர்ன் உடையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை தொடர்ந்து தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகின்றார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.
என்னதான் நடிப்பில் பயங்கர பிஸியாக இருந்தாலும், குடும்பத்தில் தனது கடமையினை சிறப்பாகவே செய்து வருகின்றார்.
சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்த இவர், குறித்த படத்தில் வில்லியாக இருக்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் எடையினைக் குறைத்து மாடர்ன் உடையில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், பாரம்பரிய உடையான புடவையில் ஜொலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். மாடர்ன் உடையில் ஒல்லியாக இருந்த இவர், புடவையில் சற்று உடல் எடை அதிகரித்துள்ளதாக காணப்படுகின்றார்.
ஆனாலும் இன்றைய முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் நிலையில் அழகில் ஜொலிப்பதோடு, ரசிகர்களையும் தக்க வைத்து வருகின்றார்.