ரசிகர்களின் மனதை வென்ற பூ... குஷ்பூ! பல அரிய புகைப்படங்கள்
1970ஆம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் திகதி, மும்பையில் பிறந்தார் நடிகை குஷ்பூ. நக்கர்த் கான் என்பதே அவரது இயற்பெயர்.
1980களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்தவர், 1989ஆம் ஆண்டு 'வருஷம் 16' என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர். தனது அழகால், நடிப்பால் அனைவரதும் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். தனது கொழுகொழு தோற்றத்தால் குஷ்பூ இட்லி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.
தமிழில் ரஜினி, கமல், கார்த்திக்,நெப்போலியன், சரத்குமார் என பல முக்கிய பிரபலங்களுடன் சேர்ந்து நடிப்பு, நடனம் என சக்கை போடு போட்டவர். மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் பல ஹீரோக்களுடன் சேர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார்.
பக்தி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றதில் இவருக்கு நிகர் இவரே.
பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த 'சின்னத்தம்பி' எனும் திரைப்படம் இவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
பிற்காலத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். தனது கணவரான சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை அவ்னி சினிமாக்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நடிகை குஷ்பூ தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நாடகத் தொடர்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தும் நடுவராகவும் பங்கேற்றும் வருகிறார்.
2010ஆம் ஆண்டிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையையும் ஆரம்பித்தார்.
தற்போது நடிப்புடன் சேர்த்து பல சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகிறார்.
எது எவ்வாறெனினும் தென்னிந்திய சினிமாவில் குஷ்பூ தனக்கென ஒரு தனியிடத்தை தற்போதும் தக்க வைத்திருக்கிறார் என்று கூறுவதில் தவறில்லை.
நடிகை குஷ்பூவின் பல அரிய புகைப்படங்கள்...