எப்படி இருந்த மனுசன்.. மீண்டும் எடையை குறைத்து சின்னத்தம்பி பிரபுவாக மாறிய இளைய திலகம்
80-களில் இருந்து 2000-ம் ஆண்டுகள் வரை முன்னணி ஹீரோவாக மக்களிடையே திகழ்ந்தவர் நடிகர் பிரபு.
இன்றும் அதே எனர்ஜி உடனும் அதே உடல்மொழியுடனும் நடிகர் பிரபு நடித்து வந்தாலும் பழைய பிரபுவை காண்பதற்கு பலரும் ஆவலாக இருந்தனர்.
அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது நடிகர் பிரபு சற்று உடல்மெலிந்து கிட்டத்தட்ட சின்னத்தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நாம் பார்த்த தோற்றத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அண்மையில், நடிகை குஷ்புவும் இதேபோல் உடல்மெலிந்த தோற்றத்தில், ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்தது போலவே இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வந்தன. இந்நிலையில் இளைய திலகம் பிரபுவும் சற்றே இளமையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படம் பரவி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “அப்படியே சின்னத்தம்பி பிரபு போலவே இருக்கிறாரே?” என்று கூறி வருகின்றனர்.