முட்டாள்களே… கிழித்து தொங்க விட்ட நடிகை குஷ்பு! லண்டனில் புதிய வீடா? பரபரப்பை ஏற்படுத்திய பதிவு
பணம் இருப்பதால் நடிகை குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கி விட்டதாக விமர்சணம் செய்த நெட்டிசன்களுக்கு நடிகை குஷ்பு கொந்தளிப்புடன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பு எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் லண்டன் சென்று அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

தன்னுடைய லண்டன் வீட்டில் இருந்தபடி, சமீபத்தில் புகைப்படம் ஒன்றை குஷ்பு வெளியிட்டிருந்தார்.
புதிய வீட்டில் இருந்து முதல் காபி என பதிவு செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், குஷ்பு லண்டனில் சொந்த வீடு வாங்கி விட்டதாகவும், அவருக்கு இருக்கும் பணத்திற்கு செல்லும் வெளிநாடுகளில் எல்லாம் சொந்த வீடு வாங்கலாம் என, விமர்சித்து கலாய்த்து வந்தனர்.
My first cup of tea at new home, London. ❤️ pic.twitter.com/zzTfvIPPAO
— KhushbuSundar (@khushsundar) September 2, 2022
கடுப்பான குஷ்பு
இதனால் கடுப்பான குஷ்பு, சமூக வலைத்தளத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு தன்னுடைய பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "பொறாமை கொண்ட பல தோல்வியடைந்தவர்களை நான் சுற்றி பார்க்கிறேன். நான் லண்டனில் புதிய வீடு என்று சொன்னால், அது சொந்த வீடு என்று தான் அர்த்தமா?
முட்டாள்களே நீங்கள் வாடகை வீடு பற்றி கேள்வி பட்டதே இல்லையா ?? ஒரு பெண் சுதந்திரமாகவும், வெற்றிகரமான பெண்மணியாகவும் இருந்தால் சிலருக்கு பார்ப்பதற்கே வலிக்கும் என்பதை நான் அறிகிறேன்.
Oooohhh. I see many envious losers around. Dumb a*#@, when I say new home in london, it does not mean it’s bought. Have you idiots ever heard of a rented home?? And I know it hurts to see a woman independent & successful. So have sleepless nights while I enjoy my stay here.?❤️??
— KhushbuSundar (@khushsundar) September 3, 2022
எனவே நான் இங்கு தங்கியிருக்கும் போது, தூக்கமில்லாத இரவுகளை அனுபவியுங்கள் என குத்தலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.
இவர் போட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.