நடிகை குஷ்புவிற்கு கொரோனா: அடுத்தடுத்து பாதிக்கப்படும் பிரபலங்கள்.. அதிர்ச்சியில் திரையுலகினர்
நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பாமர மக்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான குஷ்புக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆம், கடந்த 2 அலைகளில் தப்பித்த நிலையில், மூன்றாவது அலை என்னை பிடித்து விட்டது. தற்போது எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை எனக்கு கொரோனா தொற்று இல்லை. மூக்கு ஒழுகல் இருந்ததால், பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்தேன். கொரோனா உறுதி செய்யப்பட்டதால், என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன்.
அடுத்த 5 நாட்களுக்கு என்னை உற்சாகப்படுத்துங்கள். அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பு விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினர் வேண்டி வருகின்றனர்.
Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. Hate being alone. So keep me entertained for the next 5 days. N get tested if any signs ?
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022