குஷ்பூ பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்....சுந்தர்.சி இப்படி ஒரு ரொமான்டிக்கானவரா?
நடிகை குஷ்புவின் பிறந்த நாளுக்கு அவரின் காதல் கணவர் சுந்தர்.சி கொடுத்த ரொமான்டிக் பரிசுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பூ.
இவர் 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மனதில் இதுவரையிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடிகை குஷ்புவின் பிறந்தநாள், பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
தற்போது பிறந்தநாளுக்கு சுந்தர்.சி கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ் குறித்து குஷ்பு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ரொமான்டிக் பரிசு கொடுத்து அசத்திய சுந்தர்.சியை பாராட்டி வருகின்றனர்.