43 வயதிலும் கிளாமர் உடையில் நடிகை கிரண்... இவரின் சொத்து மதிப்பு இவ்ளோவா?
நடிகை கிரண் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், இவரது சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை கிரண்
ஜெய்ப்பூரில் 1981ம் ஆண்டு பிறந்தவர் தான் நடிகை கிரண். இவர் நடிகை ரவீனா டாண்டனின் உறவினர். மும்பையில் படித்த இவர் 2001ம் ஆண்டில் யாதென் என்ற படத்தில் நடித்தார்.
பின்பு 2002ம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிரண், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமானார்.
தொடர்ந்து வெற்றி படங்களான அன்பே சிவம், வில்லன் போன்ற படங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடத்தை பிடித்து டாப் நடிகைகளில் ஒன்றாக இருந்தார்.
ஹீரோயினாக வலம்வந்த இவர் ஐட்டம் டான்ஸ் மூலமாகவும் மக்களது மனதில் இடம் பிடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடியைாக மட்டுமின்றி, அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
பின்பு நடிப்பிலிருந்து விலகிய இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர். 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்கள் உள்ள நிலையில் உள்ளதுடன், பெரும்பாலும் பிகினி உடையிலேயே தான் இருப்பார்.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரது சொத்து மதிப்பானது 35 கோடிக்கும்
மேலாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |