திருமண வயதில் பெண் இருந்தாலும் 20 வயது ஹீரோயினாக ஜொலிக்கும் குஷ்பு... மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை குஷ்பு சமீப நாட்களாக உடல் எடை குறைத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள குஷ்பு தனது 51 வயதினை 20வயதாக குறைத்துக் காட்டியுள்ளது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுமுறையினை பின்பற்றி வரும் இவர், லண்டனின் தனது ஓய்வு நாட்களைக் கழித்துள்ளார். அங்கு தான் மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளார்.
திருமண வயதில் மகள் காணப்பட்டாலும் தனது உடல்எடையை 20 வயது ஹீரோயின் போல் மாற்றியுள்ள குஷ்புவின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகின்றனர்.