மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகை குஷ்பு.... முதல் பதிவில் கூறியது என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
நடிகை குஷ்பு
நடிகையும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருக்கும் குஷ்பு, அண்மையில் அடினோவைரஸ் என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என இவர் பதிவிட்டிருந்த தகவல் சினிமா திரையுலகத்தினை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். என் உடல்நலம் குறித்த உங்கள் அன்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Out of the hospital & back in the comforts of home. Yet complete bedrest advised for sometime. Traveling to be avoided for over a week. Reassess with the doctors & assume office & work only after that. Thank you so much for the love that poured in from world over for my…
— KhushbuSundar (@khushsundar) April 9, 2023