வீட்டை விட்டு ஓடிப்போக பிளான் போட்ட கீர்த்தி சுரேஷ்.. 15 வருட காதல் கைக்கூடிய தருணம்- ஓபன் டாக்
“வீட்டை விட்டு ஓடிப்போக பிளான் போட்டோம்..” என நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்தது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.
தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
காதல் திருமணம்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த மாதம் கோவாவில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியலுக்கு சென்ற பின்னர் பெரிதாக பொது விழாக்களில் பங்கெடுக்காத தளபதி விஜய் கூட இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்.
ஓடிப் போக நினைத்தோம்..
இப்படியொரு சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரின் காதல் எப்படி ஆரம்பமானது என பேட்டியொன்றில் பேசியுள்ளார். அதாவது, “நாங்கள் இரண்டு பேரும் முதன்முறையாக ஆர்குட்டில் தான் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம், பிறகு ரெஸ்டாரண்ட் ஒன்றில் முதலில் சந்தித்தோம். அப்போதும் நான் எனது குடும்பத்தினருடன் இருந்ததால் ஆண்டனியிடம் பேச முடியவில்லை.
பிறகு ஒரு நாள் உனக்கு தைரியம் இருந்தால் எனக்கு புரோபோஸ் செய் என்று கூறினேன். 2010ஆம் ஆண்டு என்னிடம் அவர் காதலை சொன்னார். 2016ல் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தோம். அவர் அந்த சமயத்தில் எனக்கு கொடுத்த மோதிரத்தை இன்றுவரை நான் கழற்றவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது.
நாங்கள் முதலில் வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம். நான் 12ஆவது படித்தபோது அவர் கத்தாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆறு வருடங்கள் நாங்கள் தூரமாக இருந்தே காதலித்து வந்தோம். எங்களை ரொம்பவே நெருக்கமாக்கியது என்றால் கொரோனா காலகட்டம் தான்" என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. “கீர்த்தியின் காதல் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |