மகனை பறிகொடுத்த இரண்டே வாரத்தில் பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்: கதறும் நடிகை
பிரபல நடிகையான கவிதாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் தாக்கத்தினால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 15ம் திகதி உயிரிழந்தார்.
இவரது கணவர் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
ஒரே மாதத்தில் 2 வார இடைவெளியில் மகன் மற்றும் கணவரை பறிகொடுத்த நடிகை கவிதாவின் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

