உடல் எடையைக் குறைத்து அட்டகாசமான அழகுடன் நடிகை கஸ்தூரி: முன்னணி நடிகைகள் பின்னுக்கு தள்ளிய புகைப்படங்கள்
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருவதுடன், பல சர்ச்சைகளையும் கடந்து வருகின்றார்.
தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, மிதமான கவர்ச்சியில் பார்பி பொம்மை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு வெள்ளை நிற கிராண்ட் லெஹங்கா உடை அணிந்து அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
வெளியே பல பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும், தற்போது இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது குஷ்புவைப் போன்று உடல்எடை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படத்தினை இங்கு காணலாம்.


