பட வாய்ப்பு இல்லை... கோ பட நடிகை எடுத்த அதிரடி முடிவு? இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
கோ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தும் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார்.
இதனால் ஒரே அடியாக திரைப்படத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தை நடத்தி வரும் ஓட்டலை கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை.
இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திகாவின் தங்கை துளசியும் 2013-ல் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துளசி நடிப்பில் கடைசியாக யான் படம் 2014-ல் வெளிவந்தது.
அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
