நடிகை கனிகாவிற்கு என்னாச்சு? முகத்தில் தீக்காயத்துடன் வெளியான புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை கனிகாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கனிகா, சமீபத்தில் வெளியான கோட் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை கனிகா சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், பின்பு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின்பு எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் இவர் கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குறித்த படத்தில் 10 நிமிடங்கள் கூட வராத கதாபாத்திரமாக இருந்தாலும் இவரால் தான் அப்படத்தின் கதையே வந்தது என்று கூறலாம். அதாவது மோகனுக்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், இவரது கொலைக்காக தான் மோகன் விஜய்யை பழிவாங்குவார்.
முகத்தில் என்ன?
கோட் படத்தில் கனிகா நடிக்கும் விஷயத்தை வெங்கட் பிரபு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கனிகா, சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபுவுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் கோட் படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு எந்தவொரு பதிலும் கொடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில் கனிகா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு வெங்கட்பிரபுவிற்கு நன்று கூறியுள்ளார். கோட் திரைப்படத்தில் கனிகாவிற்கு ட்ரெயினில் நடந்த விபத்தில் முகமெல்லாம் வெந்து போவது போன்ற காட்சிகள் இருக்கிறது.
அதற்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு தீயால் ஏற்பட்ட காயம் என்றதால், இதனை அவதானித்த ரசிகர்கள், கனிகாவிற்கு நடந்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு கோட் திரைப்பட சூட்டிங் புகைப்படங்கள் தான் என்று கனிகா விளக்கமும் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |