மீண்டும் வருவேன்... உடல் எடை கூடி திக்கி திக்கி வீடியோவை வெளியிட்ட கனகா; அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தில் மூலம் மிகப் பெரிய பெயரையும் பாராட்டையும் பெற்றார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கலந்த வேடமாக இருந்தாலும் சரி, ஒரு கலக்கு கலக்கிவிடுவார்.
கனகாவுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதையடுத்து கனகா தற்போது என்ன ஆனார் என்ன செய்கிறார் என்று தெரியாமலே இருந்தது.
இந்நிலையில், கனகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் நடிக்க வந்து ஒரு 30 வருஷம் ஆச்சு. என்னுடைய வயது இப்போது 50. என்னுடையா வேலைகள் அனைத்தையும் நான் பார்த்தாலும். எல்லாம் மாறிடுச்சு.
மேலும், பல பிரச்சனைகள் காரணமாக நடிக்க வரவில்லை. தற்போது பல விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் சொல்லுங்கள், தவறு இருந்தால் குறிப்பிட்டு காட்டுங்கள் என உருக்கத்துடன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.... இதைக்கண்ட ரசிகர்கள் கனகாவா? இது என வாயடைத்துபோயுள்ளனர்.