மின்சார கனவு பட நாயகி: ரசிகர்களை சொக்க வைக்கும் வைரல் புகைப்படங்கள்
பாலிவுட் நடிகை கஜோலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
நடிகை கஜோல்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் நடித்தன் மூலம் தமிழிலும் பிரபல்யம் அடைந்தார்.
மின்சாரார கனவு திரைப்படத்தின் பின்னர் தமிழிலும் தனக்கென அழிக்க முடியாத ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அரவிந்த் சாமி, பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கஜோலுக்கு தமிழில் முதல் படமே ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படத்திலும் கஜோல் நடிக்கவில்லை. முழுக்க ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்து முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.
தமிழில் பல வருடங்கள் தலையைக்காட்டாத கஜோல் 20 வருடங்களுக்கு பின் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஹீரோயினாக கலக்கும் கஜோல் ரசிகர்களை ஏங்கவைப்பதில் வல்லவர். 1992 ஆம் ஆண்டு வெளியான பகுடி என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கஜோல்.
அதனைத்தொடர்ந்து பானிகர், கரன் அர்ஜூன், டாகியூட் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற அடல்ட் படத்தின் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் தன் அழகினால் கவர்ந்துவிட்டார்.
திரைப்படங்களை கடந்து சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் கஜோல். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் கஜோல் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிளாக் கலர் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஆக்கிரமித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |