துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த காஜல் அகர்வால்- இந்த அழகே போதுமே..
துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த காஜல் அகர்வாலின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இதனை தொடர்ந்து பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படியொரு நிலையில் ராஜமவுலி இயக்கியத்தில் வெளியான “மகதீரா” திரைப்படம் தான் காஜலின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பின்னர் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மாரி என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
திருமணம்
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு காஜல் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் காதலனான கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற மகனும் இருக்கிறார்.
மகன் பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு நுழையும் காஜல் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் - 2 படத்தில் நடித்துள்ளார்.
துளியும் மேக்கப் இல்லாமல் வெளியான காட்சி
39 வயதாகும் காஜல் அகர்வால் தற்போது பார்த்தாலும் அதே அழகுடன் ரசிகர்களை கவர்கிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது அவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்வார்.
இதற்கிடையில் துளியும் மேக்கப் இல்லாமல் பொதுவெளியில் சென்ற காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் மேக்கப் இல்லாமலும் அவ்வளவு அழகாக இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த அழகிற்கு இனி மேக்கப்பே தேவையில்லை..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |