Beauty secret கேட்ட இளைஞருக்கு தமன்னா கொடுத்த பதிலடி- கொஞ்சம் கூட இத எதிர்பார்க்கல..
Beauty secret கேட்ட இளைஞருக்கு தமன்னா கொடுத்த பதில் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் “கேடி” என்ற படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமாகியவர் தான் நடிகை தமன்னா.
அதன் பின்னர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் கதாநாயகியாக சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
வியாபாரி திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுக்க, இதனை தொடர்ந்து தமன்னா பையா, வீரம், சுறா, படிக்காதவன், கண்டேன் காதலை என பல படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அத்துடன் தமிழில் கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மெகா வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார்.
Beauty secret கேட்ட ரசிகருக்கு பதிலடி
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வந்தார். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள், அவர்கள் காதலிக்கவில்லை என்று செய்தி வெளியாகி வருகிறது.
இப்படியொரு சமயத்தில் பேட்டியொன்றில் ரசிகர் ஒருவர்,“உங்களை போல் Milk Beauty போல் ஆக என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்க அதற்கு தமன்னா, “ நம் நாட்டின் நிறம் உங்களுடையது தான். எனக்கு அந்த நிறம் தான் பிடிக்கும். அந்த நிறத்திற்கு வர தான் நானும் முயற்சிகிறேன்..” என பதில் கொடுத்துள்ளார்.
தமன்னா அழகின் ரகசியத்தை கூறுவார் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது தரமான பதிலடியாக மாறியுள்ளது.
வைரலாகும் காணொளியை பார்த்த இணையவாசிகள், “தமன்னா கூறுவது தான் உண்மை..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |