அடடே இவுங்களா அது.. குஷ்புவின் இடுப்பில் இருக்கும் சுட்டி குழந்தை யார் தெரியுமா?
கிழக்கு சீமை என்ற படத்தில் குஷ்புவுடன் நடித்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குஷ்பு
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு.
இவர் சினிமாவில் இருந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக இருந்தார்.
யதார்த்தமான நடிப்பாலும் கள்ளம் இல்லாத சிரிப்பாலும் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார்.

இவர் கடந்த 2000 ஆம் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தற்போதைய புகைப்படம்
இந்த நிலையில் நடிகை குஷ்புவுடன் கிழக்கு சீமை என்ற திரைப்படத்தில் நடித்த குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குழந்தையாக நடித்திருக்கும் ஜெனிப்பரை நாம் கில்லி படத்தில் விஜயிற்கு தங்கையாக பார்த்திருப்போம்.
தற்போது சினிமா வாய்ப்புகள் ஜெனிபருக்கு குறைவாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் இருக்கும் புகைப்படத்தை மார்டன் ஆடையில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ கிழக்கு சீமை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |