பழம்பெரும் நடிகை மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ’வெள்ளி விழா’ ’புன்னகை’ ’நூற்றுக்கு நூறு’ ‘இருகோடுகள்’ ’எதிர் நீச்சல்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்
நடிகை ஜெயந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஜெயந்தி சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகை ஜெயந்தி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருதை இரண்டு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.