1.15 லட்சம் விலையுள்ள சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர்! வைரலாகும் புகைப்படங்கள்
பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் அம்பானி வீட்டு விஷேசத்தில் பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜான்வி கபூர்
தெந்திந்திய தொலைக்காட்சியின் துன்னாள் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் என்.எம்.ஏ.சி.சி-யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து போது அவர் அணிந்திருந்த சேலையின் விலை தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள முதல் தெலுங்கு படமாக தேவாரா விரைவில் வெளியாக உள்ளது.
இவர் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பார்.ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில், தற்போது ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற கிருஷ்ணர் பற்றிய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதில் அவர் அணிந்திருந்த சேலையின் விலை 1.15 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது பல சிறப்புக்களையும் கொண்டுள்ளது.இவர் சிந்துரி சிவப்பு நிற ஆர்கன்சா புடவை மற்றும் மாறுபட்ட பச்சை நிற நெட் பிளவுஸ் அணிந்திருந்தார். இது லேபிள் டோரனியில் இருந்து வந்தவையாகும்.
இதற்கு சரோஜா ரமணி புடவை என்றும், சோளிக்கு மயூரி ரமணி பிளவுஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.இந்த புடவை மற்றும் பிளவுஸ் செட் ரூ 1,62,000 மதிப்புடையது . இதில் புடவையின் மதிப்பு ரூ 1,15,500 மற்றும் பிளவுஸின் விலை ரூ 46,500 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி அதிக விலைக்கான காரணம் இது கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆர்கன்சா சிவப்பு புடவை ஒரு சிறந்த பாரம்பரியப் பகுதியாக இருக்கிறது.இது, பழங்கால டப்கா வகை சார்ந்த வேலையாகும், இந்த புடவையில் மோதி மற்றும் சீக்வின் அலங்காரங்கள் மற்றும் பால்டா லேஸ் பார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இத்தனை சிறப்புக்கள் படைத்த இந்த புடவையை அணிந்திருந்த ஜான்வி கபூர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இந்த சேலையுடன் இருந்கும் புகைப்படங்கள் தனது அன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |