சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம்
தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி, 1996ல் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணபந்தத்தில் இணைந்தார்.
திருமணத்தின் பின்னர் மும்பையிலேயே செட்டில் ஆகிய ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் இருக்கின்றனர்.
நடிகை ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் இருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்சரண் ஜோடியாக ஆர்சி 16 படத்திலும் கமிட் ஆகியிருக்கின்றார்.
இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை கடற்கரையோர பங்களாவை அவரது மகள் ஜான்வி கபூர் கெஸ்ட் ஹவுஸ் போல மாற்றி, நாள் வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார்.
நடிகையின் மறைவுக்கு பிறகு அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு தற்போது அதனை தனது அலுவலகமாக போனி கபூர் பயன்படுத்தி வருகிறார்.
தற்போது Airbnb நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்க உள்ளது, இதற்கான முன்பதிவு மே 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாம்.
இந்த அறிய வாய்ப்பை பெற உள்ளவர்கள் அந்த வீட்டில் ஒருநாள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, ஜான்வி கபூர் உடன் சேர்ந்து உரையாடவும், உணவருந்தவும் முடியும் என Airbnb நிறுவனம் அறிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |