கோலாகலமாக நடந்த இந்திரஜா திருமணம்... சூரி கொடுத்த வெயிட்டான மொய்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்திரஜா சங்கர் தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவரது மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
திருமண ரிசெப்ஷன் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூரி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அவர் பேசுவையில், ரோபோ சங்கர், பிரியா தம்பதியினரை 25 ஆண்டுகளாக தெரியும் என்றும் தங்கப்பிள்ளை செல்லப்பிள்ளை இந்திரஜா என்னோட மகள் மாதிரி தான்....
வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சினைக்கும் மூன்றாவது நபரை உள்ளே விட்டு விடாதீர்கள் என்று தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் மேடைக்கு வந்ததும் கவரில் வைத்திருந்த பணக்கட்டினை மொய்யாக வைத்துள்ளார். இதனை வாங்கிய ரோபோ சங்கர் வேற அளவில் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |