விவாகரத்தின் பின் நடிகை ஷன்சிகா எடுத்த முடிவு - பாராட்டிய ரசிகர்கள்
விவாகரத்திற்கு பின்னர் நடிகை ஹன்சிகா தற்போது எடுத்துள்ள முடிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகின்றது.

நடிகை ஹன்சிகா
தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா. இதன் பின்னர் பல காதல் திரைப்படங்களை முன்னணி கதாநாயர்கர்களுடன் நடித்து வந்தார்.
ஹன்சிகா ‘கார்டியன்’ திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் காண்பது அரிதாகவே உள்ளது.
இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா சினிமாவில் நடித்து வந்தார்.
ஆனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணமாகி நான்கு ஆண்டுகளில் பிரிந்து விட்டனர்.
இருவருக்கும் மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஹன்சிகா கணவரிடம் இருந்து ஜீவனாம்சத்தையும் மறுத்துள்ளார்.

ஹன்சிகா செய்த விவாகரத்து மனுவில் இருவருக்குள்ளும் அடிக்கடி சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டு வாங்குவாதம் முற்றி உள்ளது. இதனால் அவர்களால் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்வது மேலும் மேலும் கடினமாகி பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.
இதன் பின்னர் இருவருக்கும் பிரிவது தான் முடிவு என்பதால் சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஹன்சிகா விவாகரத்தின் பின்னர் புதிய முடிவு எடுத்துள்ளார்.

அதாவது மும்பையில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து அப்படியே ஆன்மீக வழியில் பயணிக்கிறார் ஹன்சிகா. இவர் பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னர் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில்களுக்கு ஹன்சிகா சென்று ஆன்மீக வழிபாடு செய்யப்போவதாக தகவல் வெளியாகி உ்ளளது. ஹன்சிகாவின் இந்த ஆன்மிக பயணத்துக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |