சொக்க வைக்கும் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் கௌரி கிஷன்! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை கௌரி கிஷன் ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவர்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 96 படத்தில் குட்டி ஜானு கதாப்பாத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
குட்டி ஜானுவாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவருக்கு 96 திரைப்படம் அறிமுகத்தை மட்டுமல்ல ஒரு அடையாளத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்திலும், ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார்.

பின்னர் தனுஷுடன் கர்ணன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இறுதியாக அபின் ஹரிஹரன் இயக்கத்தில், ஆதித்யா மாதவன் நடிப்பில் வெளியான அதர்ஸ் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் வெளியான போது, செய்தியாளர் சந்திப்பில் யுடியூபர் ஒருவர் கௌரி கிஷன் உடல் எடை குறித்து கேள்வியெழுப்பியது சர்ச்சையை கிளப்பிதால், கௌரி கிஷன் இணையத்தில் வைரல் டாப்பிக்காக மாறினார்.

இந்நிலையில், சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர், தற்போது ரசிகர்களை ஈர்க்கும் வகையில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |