நடிகை ஜெனிலியா திருமணத்தில் அழுத்தது தெரியுமா? இதோ Unseen திருமண பிக்ஸ்
நடிகை ஜெனிலியாவின் Unseen திருமண புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஜெனிலியா
தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள நடிகை தான் ஜெனிலியா.
மும்பையில் பிறந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
பின்பு தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம அறிமுகமானார். அதன் பின்பு சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் வெறும் 6 படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கென்று தனி பாசம் ரசிகர்களுக்கு உண்டு. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜெனிலியா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், ரித்தேஷ் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரு மத வழக்கத்தின் படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து வந்த ஜெனிலியாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் ரித்தேஷ் தன் காதல் மனைவி ஜெனிலியாவை திருமணம் செய்த Unseen புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |