விவாகரத்து பதிவிற்கு அபிஷேக் போட்ட லைக்! ஐஸ்வர்யா ராயின் பிரிவு உண்மையா?
நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் சமூகவலைத்தளத்தில் வந்த விவாகரத்து பதிவிட்டு கொடுத்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
பிரபல நடிகையாகவும், முன்னாள் உலக அழகியாகவும் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் இருவரும் பிரிய உள்ளதாகவும், விரைவில் இந்த பிரச்சினை வெளியுலகிற்கு தெரியும் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்திற்கு கூட ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மட்டுமே வந்திருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் செய்துள்ள செயல் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து பதிவிற்கு லைக்
இன்றைய காலத்தில் பிள்ளைகளுக்காக பிடிக்காத வாழ்க்கையை சகித்துக் கொண்டு வாழும் சில தம்பதிகள் பிள்ளைகள் வளர்ந்த பின்பு தனக்காக வாழ்க்கையை தெரிவு செய்து கொள்ளும் க்ரே டைவர்ஸ் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனை நபர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அபிஷேக் பச்சன் குறித்த பதிவிற்கு லைக் போட்டுள்ளார்.
இவர் இவ்வாறு லைக் போட்டதை அவதானித்த ரசிகர்கள், உண்மையில் ஐஸ்வர்யா ராயை பிரிகின்றாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |