சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது? அதுக்குள்ள ஆளே மாறிட்டாங்களே!
சுந்தரி சீரியலில் ஹீரோன் கேப்ரியல்லா செல்லஸ் கர்ப்பமாக இருக்கும் நிலையில், ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு மாறிவிட்டார்.
இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கேப்ரியல்லா செல்லஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த நடிகையாக மாறியவர் தான் கேப்ரியல்லா.
சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என நிரூபித்து, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா, அதில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து டிக் டாக்கில் காணொளிகளை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லாவுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய சுந்தரி சீரியலில் கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்தது.
கர்ப்பமாக இருக்கும் கேப்ரியல்லா செல்லஸ் தற்போது நடிப்புக்கு இடைவெளி எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சற்று உடல் பருமனாகி குறுகிய காலத்தில் ஆளே மாறிப்போ கேப்ரியல்லாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |