Photo Album: வந்த வேகத்தில் கிளம்பும் துஷாரா விஜயன்- அவ்வளவு தானா? சோகத்தில் ரசிகர்கள்
சினிமாவில் வளர்ந்து வரும் துஷாரா விஜயன் சீக்கிரம் சினிமாவை விட்டு செல்லப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
துஷாரா விஜயன்
தமிழ் திரையுலகிற்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.
கோலிவுட்டிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
தற்போது 26 வயதாகும் துஷாரா நடிப்பு மட்டுமல்லாது ஃபேஷன் துறை மீதும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான “ நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்திலும் “ ரெனே” எனும் கதாப்பாத்திரத்தில் நடிப்பை சிறப்பாக வெளிகாட்டியிருந்தார்.
வாழ்க்கை இப்படி தான் இருக்கும்..
இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய துஷாரா, “ “35 வயதானவுடன் சினிமாவை விட்டு விலகிவிடுவேன், அதன் பின் இந்த உலகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் பார்க்க கிளம்பி விடுவேன்..” என ஓபனாக கூறியுள்ளார்.
இந்த செய்தி அவருடைய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |