காணாமல் போன நடிகையின் நாய்! கண்டுபிடித்தால் இத்தனை லட்சம் பரிசா?
சமீப காலமாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வரும் நாய், பூனை இவைகள் காணாமல் சென்றால் அதன் உரிமையாளர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
காணாமல் போன நடிகையின் நாய்
ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில் டைமண்ட் என பெயரிடப்பட்டிருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதற்காக அவர் பத்தாயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார்.
இந்திய ரூபாய் மதிப்பில் 8,12,555 ரூபாயாகும் நாயை கொண்டு வந்து கொடுத்தால் அல்லது கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் பத்தாயிரம் டாலர் வழங்கப்படும் என பாரிஸ் ஹில்டன் கூறியுள்ளார்.