51 வயதிலும் குறையாத அழகு... தம்பியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட தேவயானி! வைரலாகும் காணொளி
நடிகை தேவயானி தனது 51வது பிறந்த நாளை குடும்பத்துடன் விமர்சையாக கொண்டாடிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டதிக் கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
1995 ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச் சிணுங்கி' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தேவயானி. இதை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார்.இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்துக்க ஜோடியாக தேவயானி நடித்திருந்தார்.இந்த திரைப்படம் சூப்பர்ஹிட்டானது.
அதனை தொடர்ந்து சூர்ய வம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, தெனாலி, பஞ்சதந்திரம், ஆனந்தம் ஆகிய வெற்றிப்படத்தில் நடித்து தனக்கென அழிக்க முடியாத ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர், இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய படத்தில் நடித்த போது, காதல் ஏற்பட்டு பின், குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். தேவயானியின் மூத்த மகள் இனியா, தற்போது Zee தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் நடிகை தேவயானி தனது 51வது பிறந்த நாளை குடும்பத்துடன் விமர்சையாக கொண்டாடியிருக்கின்றார்.
இதன் போது தனது தம்பி நடிகர் நகுலுடன் இணைந்து சூர்ய வம்சம் திரைப்பட பாடலுக்கு செம கியூட்டாக நடனமாடியுள்ள காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |