சொந்தமாக வாங்கிய ப்ளாட்டை விவசாய தோட்டமாக மாற்றிய நடிகை தேவயானி- குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையிலும் கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த தேவயானி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கரில் விவசாய நிலமும் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தின் போது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டவர்களுக்கு அந்த ஊரும், விவசாயமும் பிடித்து விட அங்கேயே நிரந்தரமாக குடியேறவும் முடிவு செய்து விட்டார்கள்.

இருந்தாலும், மகள்களின் படிப்பு. சீரியல் நடிப்பு இவற்றின் காரணமாக இங்கும், அங்குமாக மாறி மாறி வசித்து வருகிறார்கள். மேலும், தன்மை உள்ளிட்ட மரங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
தன்னுடைய மகள்களுடன் அந்த தோப்புக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் விவசாய நிலத்தை பிளாட் ஆக மாற்றும் மனிதர்களுக்கிடையே வாங்கிய பிளாட்டை விவசாய நிலமாக மாற்றிய தேவயானியை பாராட்டி வருகின்றனர்.