காமெடி நடிகை தேவதர்ஷினிக்கு இப்படி ஒரு மகளா? ஹீரோயின்களை மிஞ்சும் அழகு!
தமிழ் சினிமாவில், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகளின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அது வைரலாகி வருகிறது.
தேவதர்ஷினி 'மர்மதேசம்' தொடரில் நடித்த போது, தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரை காதலிக்க துவங்கினார்.
சில காலம் காதலித்து வந்த இவர்கள்... பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர்.
திருமணத்திற்கு பிறகும், இவர் தொடர்ந்து நடிப்பை தொடர இவரது குடும்பம் மற்றும் கணவன் சேத்தன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வருவதாலேயே இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார்.
சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயின் லுக்கில் இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
சிவப்பு நிற மெல்லிய சேலையை சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டி... கிறங்கடிக்கும் அழகில் தேவதையாக ஜொலிக்கிறார் நியதி.
இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ஹீரோயினாக நடிக்க நியதி தயார் ஆகிவிட்டதாக கூறி வருகிறார்கள்.