வெறும் குட் பை மட்டுமல்ல, அன்பே வா சீரியலில் முற்றுப்புள்ளி வைத்த பூமிகா - அவரே சொன்ன காரணம்!
அன்பே வா சீரியலில் இருந்து விலக போவதாக நடிகை பூமிகா அவரின் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அன்பே வா பூமிகா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெஹா சீரியல்களில் ஒன்று தான் அன்பே வா.
இந்த சீரியல் வெகு நாளாக தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
கதைக்களம் காதலில் ஆரம்பித்து தற்போது கணவன்- மனைவியாக பல எபிசோட்களை கடந்து விட்டது.
இப்படியொரு நிலையில் கதாநாயகியாக மக்களின் நெஞ்சங்களை வென்ற பூமிகா சீரியலிருந்து விலக போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிய நிலையில் இதனை அவரும் உறுதிச் செய்துள்ளார்.
விலக இது தான் காரணம்
சீரியலை போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அவரின் ரசிகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், என்னுடைய திறமையை வெளிகாட்டிய தொலைக்காட்சிக்கு என்னுடைய சீரியலுக்கும் நன்றி.. எனக்கு கொடுத்தாற் உங்கள் ஆதரவை தொடர்ந்து சீரியலுக்கும் கொடுங்கள்.. மற்றும் சன்டிவி,என்னுடைய சீரியல் குடும்பம் ஆகியோருக்கு என்னுடைய நன்றிகள்..” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், அதிர்ச்சியடைந்துள்ளதுடன் “ஏன் இப்படியொரு முடிவு ” எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலும் பூமிகாவிற்கு திருமணம் என்பதால் சீரியலை தொடர முடியாமல் போகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |