மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய அறந்தாங்கி நிஷா! ஒரிஜினல் கலர் தான் அழகு... அறிவுரை கூறிய ரசிகர்கள்
சின்னத்திரையில் பெரிய போட்டிக்கு நடுவில் ஒற்றை பெண்ணாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் அறந்தாங்கி நிஷா.
விஜய் டிவியின் பல்வேறு காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர், ஒரு சில ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
நிஷா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தாலும் அவரது தோற்றம் மற்றும் நிறம் குறித்து அவ்வப்போது கேலி கிண்டல்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், நிஷா அதிகம் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘பெயிண்ட் அடிப்பதை குறையுங்கள்’ என்றும், எந்த பிராண்ட் பெயிண்ட் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் உங்கள் உண்மையான கலர் தான் அழகு, இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று அறிவுரை கூறி வருகின்றனர். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.