28 வயசிலேயே இத்தனை கோடிக்கு அதிபதியா? வாய்பிளக்க வைக்கும் அனுபமாவின் சொத்து மதிப்பு
மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அதேபோல் அனுபமாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அனுபமா பரமேஸ்வரன்
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் பிரபலமானார்.
மலையாள நடிகையான இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் தற்போது தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் நேற்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
மொரீஷியஸ் தீவில் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ச்து லைக்குகளை குவித்து வருகின்றார்.
சொத்து மதிப்பு
அனுபமா ஒரு படத்திற்கு 1 கோடிக்கும் மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'சைரன்' படத்திற்கு இவர் 1.50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் அனுபமா, படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு விளம்பரத்திற்கு அனுபமா பெறும் சம்பளம் 50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரனின் சொத்து மதிப்பு சுமார் 35 கோடிக்கும் மேல் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |