15 வருடத்தில் நடிகை அஞ்சலி சேர்த்து வைத்திருந்த சொத்து மதிப்பு வெறும் இத்தனை கோடி தானா?
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் ஆதிக்கம் செலுத்தி முன்னணி நடிகையாக பல பாடல்களுக்கு நடனமாடியும் வருகிறார்.
இதனிடையே சில வருடங்களுக்கு முன் உடல் எடை கூடியதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

அஞ்சலி சொத்து மதிப்பு
இந்நிலையில், தற்போது இவரைப்பற்றி ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனை வருட நடிப்பில் இவர் சேர்த்து வைத்திருந்த சொத்தின் மதிப்பு வெறும் ரூ.10 கோடிதான் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே, ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கும் அஞ்சலியால் இத்தனை ஆண்டில் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்ததா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே, இவர் சொத்து பிரச்சினையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அஞ்சலி வெளியேறினார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
