திருமணமான 5 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், 5 மாதத்தில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளது இணையத்தில் பேச்ச பொருளாகியுள்ளது.
நடிகை அஞ்சலி நாயர்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர், தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து கோலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் மலையாள திரையுலகிற்கு சென்றார். மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் பொலிசாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் பின்பு தமிழிலும் பட வாய்ப்பு கிடைத்து, சிவா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி சீனு இராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியின் அண்மையில் ரிலீசான மாமனிதன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார் அஞ்சலி நாயர்.
திடீர் திருமணம்
நடிகை அஞ்சலி நாயர் கடந்த 2011ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 5 வயது குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி நாயர் கடந்த பிப்ரவரி மாதம் மலையாள படங்களில் உதவி இயக்குனரான அஜித் ராஜு என்பவரை காதலித்து, ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 5 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதன்மூலம் நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை 2-வது திருமணம் செய்துகொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
