தனுஷுடன் இணையும் அஜித்தின் மகள்: எந்தமாதிரியான கதாபாத்திரம் தெரியுமா?
தனுஷின் புதிய படத்தில் நடிகை அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் அனிகா
நடிகர் தனுஷ் நடிப்பையும் தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.
இவர் ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து பா.பாண்டி என்ற திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஏஸ். ஜே. சூர்யா நடித்த படம் ஒன்றினை இயக்கினார், ஆனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.
தற்போது தனது 50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வடசென்னையை பின்னணியை மையமாக வைத்து எடுக்க உள்ளார்களாம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கங்கனா அல்லது த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வளெியான நிலையில், தற்போது அபர்ணா பாலமுரளி தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
தனுஷின் டி50 திரைப்படத்தில் நடிகை அனிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தற்போது ஹீரோயினாக வலம் வருகின்றார் அனிகா.
இப்படத்தில் அனிகா, வடசென்னையைச் சேர்ந்த பெண்ணாக தனது கதாபாத்திரத்தில் மிகவும் அழுத்தமாக நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |