10 நாளில் இறந்துவிடுவதாக சாபம் விட்ட உறவினர்கள்.. மறைந்த சிந்துவிற்கு நடந்த கொடுமைகள்
மார்பக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு நடிகையான சிந்து மரணமடைந்த நிலையில், அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை சிந்து
வசந்த பாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து. இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் மரணமடைந்தார்.
இந்த தகவலை நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். ஆனால் இவர் இறப்பதற்கு முன்பு உறவினர்களிடம் பல சாபங்களை பெற்றுள்ளார். அதிலும் 10 நாட்களில் இறந்துவிடுவதாக சாபம் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த உண்மையை சிந்துவே நேரடியாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவர் கூறுகையில், கடவுளிடம் தினமும் கேட்பது நான் அனுபவிக்கும் சித்ரவதையிலிருந்து தன்னை எடுத்துக்கொள்ள தான் கேட்கிறேன்.. கேன்சருக்கு மருந்து என்பது கிடையாது. அதனை குணப்படுத்திவிட முடியும் என்று கூறிவது ஒரு ஆறுதல் மட்டுமே.
கொரோனா காலத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த தனக்கு மார்பகத்தில் கட்டி இருப்பது தெரியவந்தது. மருத்துவரிடம் சோதனை செய்து பார்த்ததில் சாதாரண நீர் கட்டி என்று கூறி அனுப்பியுள்ளனர்.
பின்பு கட்டி பெரிதாக ஆரம்பித்தது. தான் செய்த தவறு பயாப்சி செய்தது தான். அதன் பின்பு இந்த கட்டிகள் பரவ ஆரம்பித்ததாகவும், தனது ஒரு பக்க மார்பை அகற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
நான் அதிகமானவர்களுக்கு உதவி செய்தேன். ஆனால் தனக்கு உதவி செய்தவர்கள், உடனே பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததுடன், தன்னை தகாத வார்த்தையால் பேசியது மட்டுமின்றி, இன்னும் 10 தினத்தில் இறந்துவிடுவதாகவும்... இப்பொழுது கேன்சர் மட்டும் தான்... பின்பு அடுத்தடுத்து நிறைய நோய்கள் வரும் என்று சாபம் விட்டதாக கூறியிருந்தார்.
வெறும் 10 நாளைக்கு தேவைப்படும் மாத்திரை ரூபாய் 6500 ஆகும். எனது கையில் சுத்தமாக உணர்ச்சி என்பதே இல்லை... நான் உயிர்பிழைப்பதை விட சாவதே மேல் என்றும், மற்றொரு மார்பிலும் புற்றுநோய் பாதிப் ப ஏற்படுத்தியதாகம் அவர் கூறியிருந்தார்.