ஒரே பாடலில் உலகளவில் டிரெண்டான நடிகை!! கலக்கலான பேட்டி
மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனகா.
தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர், தற்போது ரீமேக் பாட்டின் மூலம் உலகப்புகழ் அடைந்துவிட்டார்.
டிக்கிலோனா படத்தில், கமல் - குஷ்பூ நடித்த பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் ரீமேக் பாடலுக்கு நடிகை அனகா, ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனும், ஜானகியும் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் ரீமேக் வெர்சனுக்கு புதுவிதமான எக்ஸிபிரனுடன் அனகா நடனமாடி வைரலாகியுள்ளார்.
தன்னுடைய திரைப்பயணம் குறித்தும், இன்னும் ஏராளமான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் நடிகை அனகா.