பைத்தியகாரி போன்று சித்திர்க்கப்பட்டேன், கோபிநாத்தை வர சொல்லுங்க.. நியாயம் கேட்கும் நடிகை
பைத்தியகாரி போன்று சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்டேன். கோபிநாத்தை வர சொல்லுங்கள் அவருடன் நேருக்கு நேர் பேச வேண்டும்..” என நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசிய இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசப்பட்ட விடயம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்தியாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் தெருவில் கிடக்கும் நாய்கள் காப்பகங்களில் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு முறையான தடுப்பூசி போடவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
இது குறித்து கடந்த வாரம் நீயா நானாவில் விவாதங்கள் கிளம்பின.
கோபிநாத்தை வர சொல்லுங்க..
நீயா நானாவில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சின்னத்திரை நடிகை அம்மு மற்றும் நடிகர் படவா கோபி ஆகியோரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் அம்மு ராமசந்திரன் கடைசியாக கொடுத்த பேட்டியில் நீயாநானா நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் நடக்கும் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “நாங்கள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தோம். ஆனால் பைத்தியகாரிகள் போன்று சித்தரிக்கபட்டோம். கோபிநாத்துடன் நேருக்கு நேர் அமர்ந்து வாதம் செய்ய தயாராக இருக்கிறேன்..” என மன கவலையுடன் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக வேறு என்னென்ன பேசியிருக்கிறார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
