அம்மு அபிராமியின் காதலர் இந்த பிரபலமா? புகைப்படத்துடன் உறுதி செய்த நடிகை- குவியும் வாழ்த்துக்கள்
நடிகை அம்மு அபிராமியின் காதலர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு அபிராமி.
இவர் கீர்த்தி சுரேஷ், விஜய் நடிப்பில் வெளியான “பைரவா” படத்தில் சிறிய ரோலில் நடித்திருப்பார்.
பின்னர் ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் என்றும் அழியாத நடிகையாக மாறி விட்டார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய அம்மு அபிராமியை தெரியாதவர்கள் என்று தற்போது யாரும் இருக்க மாட்டார்கள்.
இதனை தொடர்ந்து கடைசியாக “கண்ணகி” என்ற திரைப்படத்தில் அபிராமியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமான பாராட்டுக்களை பெற்றிருந்தன.
காதலருடன் இருக்கும் புகைப்படம்
இந்த நிலையில் தற்போது அபிராமி காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
அபிராமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபன் மணியுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த விடயம் உறுதியாகாமல் இருந்த நிலையில், அதனை அம்மு அபிராமியே உறுதி செய்துள்ளார்.
அந்த வகையில், பார்த்திபன் மணியின் பிறந்த நாளை முன்னிட்டு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அம்மு அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |