ரவிமோகனுக்கு தரமான அட்வைஸ் கொடுத்த நடிகை அம்பிகா! வைரலாகும் உருக்கமான பதிவு
நடிகர் ரவிமோகன், ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சை விவகாரத்தில் சில தினங்களுக்க முன்னர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது திருமண வாழ்க்கையில் தனக்கு நடந்த மொத்த அநியாயங்களையும் கண்ணீர் மல்க கொட்டி தீர்த்திருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரவி மோகன் சர்ச்சை
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷாவை ரவி மோகன் மேடையில் வைத்து கட்டியணைத்தது, மற்றும் மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் சென்னையை விட்டே வெளியேறுவதாகவும், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறுவதாகவும் காணொளியை வெளியிட்டுவிட்டு அனைத்தையும் முடிக்கினார்.

அதன் பின்னரே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார். அதனால் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட ரவி மோகன் பக்கம் தான் நியாயம் இருப்பதாக பேச ஆரம்பித்துள்ளனர்.
நடிகை அம்பிகா பதிவு

இந்நிலையில் 80களில் பிரபலமான நடிகையாக இருந்த அம்பிகா அவரது எக்ஸ்தள பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், அன்பு ரவி, தயவுசெய்து பலவீனமாகிவிடாதே. எல்லாமே கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும்.
கடவுள் சற்று தாமதம் செய்கிறார், ஒருவேளை உன்னை சோதிக்கிறார் அவ்வளவுதான். எதிர்மறையான எதையும் செய்யாதே. உனக்கு நீயே தீங்கு இழைத்துக்கொள்ளாதே. (குழந்தைகள் மீதான) உனது அன்பு, (உன் குழந்தைகளாகிய) உன் காதலை மீண்டும் உன் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும்.
பிரார்த்தனை செய். முக்கியமாக, நன்றாக உறங்கு. உன்னை நன்கு அறிந்த உன் பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரத்தைச் செலவிடு என ரவிமோகனுக்கு ஆறுதல் கூறும் வகையில் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
Dear ravi dont b weak.Everything is going to b ok. god is kind of delaying and may be testing.dont do anything negative. dont hurt yourself .ur love (towards kids)will bring yr love (ur kids)in ur life.pray.mainly https://t.co/oNWANCuYl3 withur parents or friends who knows u.
— Actress Ambika (@ActressAmbika) May 20, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |