9 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்ட அமிதாப் பச்சனின் ரீல் மகன்- என்ன காரணம்?
பிரபல பாலிவுட் நடிகர் அமன் வர்மா மனைவியை பிரியப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து
சமீபக்காலமாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களின் விவாகரத்தை அறிவித்து வருகிறார்கள்.
அமீர்கான் அவருடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தது முதல் இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகிறார்கள்.
உதாரணமாக நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜெயம் ரவி - ஆர்த்தி, ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு, ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி உள்ளிட்ட பலரை கூறலாம்.
விவாகரத்தை அறிவித்த பாலிவுட் நடிகர்
இந்த நிலையில், அமிதாப் பச்சனின் ரீல் மகனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அமன் வர்மா தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்துள்ளார்.
அமன் வர்மா பாலிவுட் நடிகை வந்தனா லால்வானி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணமாகி 9 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது இருவரும் பரஸ்பரத்துடன் பிரியப்போவதாக கூறப்படுகிறது. இருவரும் சூப்பரான ஜோடியாக கடந்த 9 ஆண்டுகள் காதலுடன் வலம் வந்தார்கள்.
மாறாக திடீரென இப்படியொரு முடிவை ஏன் எடுத்தனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW