கியூட் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படங்கள்
தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை அமலா பால் குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை அமலா பால்
மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால்.
தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிலையில் திருமணமாகி 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்த அமலா பால், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.

தன்னுடைய கர்ப்பகாலத்தை கணவருடன் மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடியில் அழகிய குட்டி குழந்தை ஒன்றை வைத்து கொண்டு விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டு, '2 ஹாப்பி கிட்ஸ்' என கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        