Photo Album: புது ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய ஆல்யா- எப்படி இருக்காங்க பாருங்க
சின்னத்திரை நாயகி ஆல்யா மானசா ஹேர் ஸ்டைல் மாற்றி பது லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சஞ்சீவ்– ஆல்யா
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் தான் சஞ்சீவ்– ஆல்யா மானசா.
இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகளும் தற்போது இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஆல்யா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இனியா சீரியலில் நாயகியாக நடித்தார். மாறாக சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாக யூடியூப் சேனலொன்றையும் நடத்தி வருகிறார்கள். இவர்களின் காணொளிகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.
புது லுக் படங்கள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா ஹேர் கட் செய்து தன்னுடைய லுக்கையே மாற்றியுள்ளார்.
இவர், சன் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக செய்தி வெளியாகிய சமயத்தில் இவர், லுக்கை மாற்றியது அதற்காகவோ என சந்தேகிக்க வைக்கிறது.
ஆல்யாவின் புது லுக் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், புகைப்படங்களுக்கு லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
