Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி
குணசேகரனை எப்படியாவது மீண்டும் சிறைக்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் கதிர் ஆர்வமாக வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியல் முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த குணசேகரன் அறிவுக்கரசியுடன் சேர்ந்து கொண்டு வீட்டிலுள்ள மருமகள்களை வெளியில் அனுப்பி விட்டார். ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி தனியாக இருந்து வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரப்போராடுகிறார்கள்.
பெண்களின் ஆட்டத்தை முடிக்க நினைத்த குணசேகரன் நந்தினியின் மசாலா கம்பெனி ஆர்டருக்கு ஆப்பு வைத்தார். அதன் பின்னர் பெண்களுக்கு பக்கபலமாக இருக்கும் பிள்ளைகளிடம் அன்பாக பேசி அவர்களையும் தன் பக்கம் வந்து விடுகிறார்.
“நீங்க இந்த வீட்டு வாரிசு. உங்கள இப்படி கஷ்டப்பட வைக்க மாட்டோம்..” என பாசமாக பேசி அவர்களை தங்கள் கட்டுக்குள் வைக்க அடுத்தடுத்த வேலைகளை பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
வசமாக சிக்கிய தர்ஷன்
இந்த நிலையில், பெண்களின் முறைப்பாட்டின் படி, பெண் பொலிஸ் அதிகாரியொருவர் வீட்டிற்கு நுழைந்து நிலாவிற்கு ஆதரவாக பேசுகிறார். அவரை உள்ளே விடாமல் கதிர் என்ன வேலைப் பார்த்தாலும் அவற்றை தாண்டி அவர் உள்ளே வந்து தர்ஷனை விசாரணைக்காக கூட்டிச் செல்கிறார்.
[
காதலிக்கும் காலத்தில் நிலாவிற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் படங்கள் அனைத்தும் அதிகாரி கையில் சிக்கி விடுகிறது. இதனால் தர்ஷன் வசமாக சிக்கி விட்டார்.
மேலும், கதிர் எப்படியாவது பிணையில் இருக்கும் குணசேகரனை மீண்டும் சிறைக்கு அனுப்பி விட வேண்டும் என உடன் இருந்து கொண்டே பல வேலைகளை பார்த்து வருகிறார். இந்த விடயத்தை மருமகள்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
